ADDED : மார் 16, 2024 01:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மத்திய
அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஈரோட்டில் நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை
வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல், வடக்கு மாவட்ட செயலாளர்
ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன் முன்னிலை வகித்தனர்.
மண்டல செயலாளர்கள் சசி கலையரசன், வளவன் வாசுதேவன் கண்டன
உரையாற்றினர்.
