/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமித்ஷாவை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
/
அமித்ஷாவை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 21, 2024 02:58 AM
சத்தியமங்கலம்: அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சத்தியமங்கலத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் தலைமையில், பவானி-சாகர் தொகுதி செயலாளர் தம்பிராஜன், நிர்வாகிகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்து, பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால் போலீசார், வி.சி.,கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.*ஆதி தமிழர் பேரவை சார்பில், சத்தி பஸ் ஸ்டாண்டில், அமித்-ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதிலும் அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.