/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கலை கல்லூரி ஐந்தாவது ஆண்டு விழா
/
வி.இ.டி., கலை கல்லூரி ஐந்தாவது ஆண்டு விழா
ADDED : மார் 18, 2024 03:37 AM
ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரியின், ஐந்தாவது ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வேளாளர் அறக்கட்டளை பொருளாளர் அருண் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் நல்லசாமி ஆண்டறிக்கை வாசித்தார். எவர்லைப் சி.பி.சி., தலைமைத் திறன் மேலாளர் ஜூலி கிருபாவதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லுாரி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கி பேசினார். வணிகவியல் துறை பேராசிரியர் அருள்ராஜ், கணினியியல் துறை கார்த்திகா, வணிகவியல் துறை நாகலட்சுமி, கணினியியல் துறை (ஏ.ஐ.டி.எஸ்.,) பிரசாத் ஆகியோருக்கு மிகச்சிறந்த பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. நிறைவில் கல்லுாரி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, குலசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

