ADDED : மார் 20, 2026 04:14 AM

ஈரோடு:சட்டசபை தேர்தலை ஒட்டி, தேர்தல் செலவு கணக்குக்காக, உணவு, வாகனங்கள், வாடகை என அனைத்தையும் பட்டிய-லிட்டு, கட்டணம் நிர்ணயித்து கட்சி பிரதிநிதிகளிடம் ஒப்புதல் பெறப்படும். இதன்படி தற்போதைய சட்டசபை தேர்தலுக்காக உத்தேச செலவு தொகை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அசைவ சாப்பாடு-ரூ.200, சைவ சாப்பாடு-80, வெஜ் பிரி-யாணி-70, கலவை சாதம்-40, இட்லி 2-20, சப்பாத்தி 2-40, பூரி 2 - 40, பொங்கல்-50, ரோஸ்ட்-60, ஊத்தப்பம்-40, பரோட்டா-15, வடை சிறிய, பெரியது- 5 - 10, தண்ணீர் பாட்டில் 1 லிட்டர்-20, மட்டன் பிரியாணி-250, சிக்கன் பிரி-யாணி-120, டீ-10, காபி-15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்-டுள்ளது.தகர கூரை பந்தல் வாடகை சதுரடி-20 ரூபாய், இரும்பு பைப் பால்ஸ் சீலிங் மேடை சதுரடி-25, பின்னணி அலங்காரம் சது-ரடி-55, பூந்தொட்டி-50, காயர் மேட் விரிப்பு சதுரடி-5, பிளாஸ்டிக் நாற்காலி 1 - 10, பெடஸ்பைல் பேன் ஒரு நாள்-400, டியூப் லைட் 1 - 50, போகஸ் லைட்-400, ஜெனரேட்டர் - 1,000 முதல், 6,000 வரை, மைக் செட் - 1,750 - 5,000 வரை, போடியம்-1,500, ஒயர் மைக் - 500, ஒயர்லெஸ் மைக்-750, வி.ஐ.பி.சேர்-300, துணி மூடிய சேர்-35, வீடியோ, போட்டோ எடுப்போருக்கு, 1,500, ட்ரோன்-5,000 ரூபாய்.
சிங்கிள் ரூம்-650, டபுள்ரூம்-1,050, டபுள் ஏ.சி.,-1,700, ரோஜா மாலை, 2,400, சம்பங்கி மாலை, 1,500, சால்வை, கம்பளி-250, பருத்தி சால்வை-200, துண்டு-50 - 100 ரூபாய்.
வாழைமரம் 1 ஜோடி-2,500, பேண்டு வாத்திரம்-1,000, தாரை தப்பட்டை வாத்தியம்-1,000, சரவெடி 1,000 வாலா-450, டீ டேபிள்-70, டேபிள்-50, சோபா-2,200, ஏர் கூலர்-1,000 - 4,000, பைக் பேரணியில் 1 பைக்-1,000, நாட்டுப்புற பாட்டு ஒரு நபர் கூலி -1,000, ஒலி பெருக்கி அறிவிப்பாளர்-1,000, கட்சி அலுவலகம் மாத வாடகை 1,000 சதுரடி - 55,000, திருமண மண்டபம்- 20,000 - 1 லட்சம் ரூபாய் வரை. ஏ.சி.இல்லாத கார்-3,600, ஏ.சி.கார்-4,000, இன்னோவா-4,500, மேக்-ஸிகேப்-4,500, ஆட்டோ-2,000 ரூபாய் என, நிர்ணயித்துள்ளனர்.
பறக்கும் படை குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர், இவற்றை ஒவ்வொரு இடங்களிலும் கணக்கிட்டு, உத்தேச மதிப்பை வேட்பாளர் கணக்குக்கு அனுப்புவர். வேட்பாளர் தரப்-பிலும், செலவை வழங்கி 'நேர்' செய்து தேர்தல் கணக்காக ஒப்ப-டைப்பர். இந்த தொகை, சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் உள்ள தொகுதி தவிர பிற தொகுதி-களில்,சிறிய அளவு மாற்றம் செய்து ஒப்புதல் வழங்குவார்கள்.
