/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு
ADDED : நவ 23, 2024 03:00 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு காய்கறி வரத்து அதிகரிப்பால், விலை, 10 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஈரோடு, வ.உ.சி., பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்-கெட்டுக்கு, ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்தாகும். கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலை மாறி, மிதமான பருவ மழையுடன் காணப்படுவதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த அக்., மாதம் நிலவிய விலையைவிட கிலோவுக்கு, 10 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிலோ, முள்ளங்கி-40 ரூபாய், கத்திரி-40, வெண்டை-40, பாகற்காய்-40, பீர்க்கன்-70, முருங்கை-150, பட்டை அவரை-70, கருப்பு அவரை-110, புடலை-50, சுரைக்காய்-25, வெள்ளை பூசணி-20, சிவப்பு பூசணி-20, பச்சை மிளகாய்-30, கேரட்-80 முதல், 90, பீன்ஸ்-50, பீட்ரூட்-80, காலிபிளவர்-20 முதல், 35, கோஸ்-30, தக்காளி - 30-35-40, சின்ன வெங்காயம்-60, பெரிய வெங்காயம்-60, உருளைக்கி-ழங்கு-50, சேனைக்கிழங்கு-80, கருணை கிழங்கு-80, பழைய இஞ்சி-130, புதிய இஞ்சி-90 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் முருங்கை மட்டும் பனிப்பொ-ழிவால் குறைவாக வரத்தானது. மற்ற அனைத்து காய்கறிகளும் கூடுதலாகவே வரத்தானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.