ADDED : ஏப் 17, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
அந்தியூர் :கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுார் தாலுகா, கொள்ளேகால்-நால்ரோடு வரை சாலை புனரமைப்பு பணி கடந்த, 5ம் தேதி முதல் நடந்தது. இதனால் அந்தியூர்-பர்கூர் ரோடு வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் சாலைப்பணி நிறைவடைந்த நிலையில், நேற்று காலை முதல் வரட்டுப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
