/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நசியனுார் அருகே அடுத்தடுத்து முட்டிக்கொண்ட வாகனங்கள்
/
நசியனுார் அருகே அடுத்தடுத்து முட்டிக்கொண்ட வாகனங்கள்
நசியனுார் அருகே அடுத்தடுத்து முட்டிக்கொண்ட வாகனங்கள்
நசியனுார் அருகே அடுத்தடுத்து முட்டிக்கொண்ட வாகனங்கள்
ADDED : நவ 18, 2025 01:32 AM
பவானி, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பவானி அருகே நசியனுார், பெரியவாய்க்கால்மேடு பகுதியில் நேற்று மதியம், 1:00 மணியளவில், திருப்பதியில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் சென்றது. பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பைக்கில் வந்த இருவர் திடீரென சாலையின் குறுக்கே புகுந்ததால், ஆம்னி பஸ் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார். இதனால் பைக்கில் வந்த இருவரும் மயிரிழையில் தப்பியது தெரியாமல், மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அதேசமயம் பஸ் திடீரென நின்றதால், அதை தொடர்ந்து வந்த ஒரு ஸ்விப்ட் காரும், இதன் பின்னால் வந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் வேனும், இதன் பின்னால் வந்த லாரியும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் ஆம்னி பஸ்ஸில் வந்த மூன்று பெண்கள், காரில் பயணித்த மூன்று பேர் என ஆறு பேர் லேசான காயம் அடைந்தனர். இதனால் நான்கு வழிச்சாலையில், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

