/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோட்டில் நெரிசல்

ADDED : அக் 18, 2025 01:22 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க், பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான மொத்த, சில்லறை ஜவுளி விற்பனை கடைகள் செயல்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்க மக்கள், வியாபாரிகள் ஜவுளி கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் இவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவ
டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோட்டின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் தவிக்கின்றனர். வாகனங்களை
முறையாக நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.