வெள்ளகோவில், கரூர் மார்க்க பஸ்கள்ரயில்வே ஸ்டேஷன் வரை வர அனுமதி
வெள்ளகோவில், கரூர் மார்க்க பஸ்கள்ரயில்வே ஸ்டேஷன் வரை வர அனுமதி
ADDED : மே 27, 2026 04:18 AM
ஈரோடு:ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், வெள்ளகோவில் வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வரை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி, அரசு போக்குவரத்து கழக, ஈரோடு மண்டல பொது மேலாளர் சுற்றறிக்கையில் கூறியதாவது: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெள்ளகோவில், கரூர் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் கடந்த டிச., 4 முதல் சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, அரசு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கம் செய்ய வேண்டி, தனியார் பஸ் நிறுவனங்கள், நீதிமன்ற தடை உத்தரவு பெற்று, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் நடைமுறைக்கு வந்த பின்னும், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். எனவே, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கி வந்த ஈரோடு - வெள்ளகோவில் மற்றும் ஈரோடு - கரூர் வழித்தட பஸ்கள் மட்டும், மாவட்ட நிர்வாக அனுமதிப்படி நேற்று முதல், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து செல்ல சம்மந்தப்பட்ட கிளை மேலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்றிரவு முதல் கரூர், வெள்ளகோவில் மார்க்க பஸ்கள், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து செல்கின்றன.
