நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 3,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது.
ஒரு மூட்டை, 1,240 ரூபாய் முதல், 1,310 ரூபாய் வரை விற்றது. இதேபோல் உருண்டை வெல்லம், 3,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,320 ரூபாய்; அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,350 ரூபாய் முதல், 1,410 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாயும், அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்ததாகவும், உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.