/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கல்லுாரி 2வது பட்டமளிப்பு விழா
/
வி.இ.டி., கல்லுாரி 2வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 10, 2025 06:48 AM
ஈரோடு: ஈரோடு, திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் பங்கேற்றார்.
வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர், விழாவை தொடங்கி வைத்தார். வேளாளர் கல்வி அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் குலசேகரன், நிர்வாக குழு உறுப்பினர் சின்னசாமி, இணை செயலாளர் ராஜமாணிக்கம், வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான பாலசுப்பிரமணியன், யுவராஜா கலந்து கொண்டனர். முதல்வர் நல்லசாமி வரவேற்றார். கல்லுாரி நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 378 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.