ADDED : ஜன 01, 2026 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசத்தில், தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரி சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையிலான டாக்டர்கள், வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் மாடுகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும், நோய் கண்டறிதல், தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு அறிவியல் பூர்வமான கால்நடை பராமரிப்பு நடைமுறைகள், கால்நடைகளுக்கு சமச்சீர் உணவு மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. மாணவியர் ஸ்ரீவித்யா, கண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

