/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்
/
கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்
ADDED : ஆக 22, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம்: கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து, கடவுள் ராமர் குறித்து இழிவாக பேசியுள்ளார்.
இச்செயல் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீதும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கம்பன் கழக தலைவர் ஜெகத்ரட்சகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

