ADDED : ஏப் 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:விஸ்வ ஹிந்து பரிஷத், ஈரோடு கோட்டத்தின் சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில அமைப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர்கள் மகாதேவன், சிவசக்தி முன்னிலை வகித்தனர்.
வக்ப் வாரிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறையால் ஹிந்து சமுதாய மக்கள் வீடுகள், அரசு சொத்து சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்தும் கோஷமிட்டனர். மேற்கு வங்க மாநில அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் காயத்ரி, இணை செயலாளர் யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

