பருவமழை முன்னேற்பாடு குறித்து காணொலி காட்சியில் ஆலோசனை
பருவமழை முன்னேற்பாடு குறித்து காணொலி காட்சியில் ஆலோசனை
ADDED : செப் 23, 2026 07:27 AM
ஈரோடு:முதல்வர்
விஜய் காணொலி காட்சியில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி
குறித்து, மேற்கு, தெற்கு மண்டல மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை
நடத்தினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி
பங்கேற்றார்.
மழை, வெள்ள இடர்பாடுகளை எதிர்கொள்ள அனைத்து
துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வட்டார அளவில்
முன்னெச்சரிக்கை, தேடுதல், மீட்பு, நிவாரண முகாம், மேலாண்மை சிறப்பு
குழுக்கள் அமைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், 1077, 0424
2260211 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு, பேரிடர் தகவல்களை
உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., - தாசில்தார்
அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட வேண்டும்.
மீட்கப்படுவோர் தங்க வைக்க, உணவு, மருத்துவ வசதிகளை தயார்படுத்த
யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு மாநகராட்சி
அலுவலகத்தில், ஆணையர் அர்பித் ஜெயின் தலைமையில் கூட்டம் நடந்தது.
கனமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளை துல்லியமாக கண்டறிந்து
கண்காணிக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு யோசனை தெரிவிக்கப்பட்டது.
