ADDED : ஆக 27, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த், 73வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகில், ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில், விஜயகாந்த் போட்டோவுக்கு, மாநில கலை இலக்கிய துணை செயலாளர் பிரசன்னா, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் அந்தியூர் ஒன்றிய அவைத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட நிர்வாகி சிவலிங்கம், கேப்டன் மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, நகர பொறுப்பாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேஷ் மற்றும் மகளிரணி உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.