விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 23, 2026 06:05 AM

பெருந்துறை:பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. தேர்வெழுதிய, 421 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். பள்ளி மாணவி யபிக்ஷாஸ்ரீ, 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
தனுஸ்ரீ, 496 பெற்று இரண்டாமிடம், பிரியதனன்யா, 495 எடுத்து மூன்றாமிடம் பிடித்தார். ஈரோடு கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர். 16 பேர் 490 மதிப்பெண்களுக்கு மேலும், 67 பேர் 480 மதிப்பெண்களுக்கு மேலும், 225 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர். 61 பேர் பல்வேறு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் எடுத்தனர். சாதித்த மாணவ, மாணவியர், இதற்கு காரணமான ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் மோகனம்பாள், தலைவர் மற்றும் முதல்வர் செந்தில்குமார் பாராட்டி பரிசு வழங்கினர்.
