/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஜயமங்கலம் பாரதி பள்ளி ஆண்டு விழா
/
விஜயமங்கலம் பாரதி பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 07, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயமங்கலம் பாரதி பள்ளி ஆண்டு விழா
பெருந்துறை, பெருந்துறை, விஜயமங்கலம் அருகே சரளையில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 37-வது ஆண்டு நடந்தது. பள்ளி தாளாளர் மோகனாம்பாள் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயகுமார் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் முதலிடம் மற்றும் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயம், ரொக்கப்பரிசு வழங்கி பேசினார். இதையடுத்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.