ADDED : பிப் 17, 2026 06:51 AM

அ நிறம் | அளவு
கோபி;கோபி தாலுகா அலுவலகத்தில், கிராம உதவி-யாளர்கள் சங்கத்தினர், ஆறாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால-முறை ஊதியம், 15 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கி அரசாணை வெளியிட வலியுறுத்தி, கடந்த, 11ம் தேதி முதல் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறாம் நாளாக நேற்று, கோபி மற்றும் நம்பியூர் தாலுகாவை சேர்ந்த, 40 பேர், காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி வட்டத்த-லைவர் சாதிக் பாட்ஷா, வட்ட செயலாளர் சுரேஷ், நம்பியூர் வட்ட செயலாளர் கோடீஸ்வரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
