/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் கிராம பூஜாரிகள் கோரிக்கை
/
மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் கிராம பூஜாரிகள் கோரிக்கை
ADDED : டிச 30, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கிராம கோவில் பூஜாரிகள் பேரவை திருப்பூர் மாவட்ட பொதுக்-குழு கூட்டம், மண்டல அமைப்பாளர் சின்னகுமரவேல் தலை-மையில், தாராபுரத்தில் நேற்று நடந்தது.
மாநில பொது செய-லாளர் சோமசுந்தரம், கிராம கோவில் பூஜாரிகள் நிலை குறித்து பேசினார். கிராம கோவில் பூஜாரிகளுக்கு நிபந்தனையின்றி, 10 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்க வேண்டும். 60 வயது முடிந்த பூஜாரிகளுக்கு, 5,௦௦௦ ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பூஜாரிகள் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் திருச்செல்வம், மாவட்ட அமைப்பாளர் அம்பிகாபதி உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

