ADDED : ஜூன் 03, 2025 01:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலர் வீரகோபால் தலைமையிலான மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
சிவகிரி டவுன் பஞ்., பொரசமேட்டுபுதுார், அண்ணா நகர் பகுதியில், 2004ல் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார், 130 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கினார். அங்கு வீடு கட்டி, 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இப்பகுதிக்கு இதுவரை அடிப்படை வசதிகளான தார்ச்சாலை, குடிநீர், தெரு விளக்கு, பொது கழிவறை என ஏதும் செய்து தரவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். காலனி என்ற பெயர் பலகையை அகற்ற அரசு உத்தரவிட்டும், எங்கள் பகுதி, கொல்லன்கோவில் பகுதியிலும் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு கூறினர்.
