/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டாசை தவிர்த்த மக்கள் வெறிச்சோடிய கிராமங்கள்
/
பட்டாசை தவிர்த்த மக்கள் வெறிச்சோடிய கிராமங்கள்
ADDED : அக் 21, 2025 01:15 AM
ஈரோடு, ஈரோடு அருகே வெள்ளோடு பறவைகள் சரணயாலயம் உள்ளது. இதை சுற்றி பி.மேட்டுபாளையம், புங்கம்பாடி, தலையன்காட்டு
வலசு, செம்மாம்பாளையம் உட்பட பத்து கிராமங்கள் உள்ளன. சரணாலயத்தை ஒட்டி இருப்பதால், இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், தீபாவளிக்கு வெடி பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து விட்டனர். நடப்பாண்டு, ௧௯வது ஆண்டாக இதை கடைப்பிடித்தனர். இதனால் இந்த கிராமங்களில் மட்டும் நேற்று பட்டாசு சத்தம் கேட்கவில்லை.
இதனால் இப்பகுதியில் சிறுவர், சிறுமியர் உள்ள குடும்பங்கள், வேறு பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடினர். இதனால் இக்கிராமங்கள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.