தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்

படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்

படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்


ADDED : அக் 26, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, காவிரிக்கரையில் உள்ள படித்துறையில் பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். பின்னர் பிண்டம், பூக்கள், மாலை என பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை ஆற்றில் கரைக்கின்றனர்.

இதேபோல் பழைய சுவாமி புகைப்படங்கள், துணி, விளக்கு போன்றவற்றையும் ஆற்றில் வீசுவதால் படித்துறை முழுவதும் மாசடைந்து காணப்பட்டது. மேலும் சுகாதார சீர்கேடு நிலவியதால், விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று பவுர்ணமி தினம் என்பதால் காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க வந்தனர். இதனால் படித்துறைகளை சுத்தம் செய்யும் பணியில், சிறுவர், பெரியவர் என, 15க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரையில் தேங்கியிருந்த துணி, போட்டோ பிரேம்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆகாயத் தாமரைகளை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் காவிரி ஆற்றின் மகிமை, சுத்தமாக பேணி காப்பதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us