தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'எண்ணற்ற பயனுள்ள திட்டங்களை தந்த தி.மு.க., ஆட்சி தொடர ஓட்டளியுங்கள்'

'எண்ணற்ற பயனுள்ள திட்டங்களை தந்த தி.மு.க., ஆட்சி தொடர ஓட்டளியுங்கள்'

'எண்ணற்ற பயனுள்ள திட்டங்களை தந்த தி.மு.க., ஆட்சி தொடர ஓட்டளியுங்கள்'


ADDED : ஏப் 14, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், ஏப். 14தாராபுரம் (தனி) தொகுதி தி.மு.க., வேட்பாளர் டாக்டர் இந்திராணி, கல்விக்காக புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை தந்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் என கூறினார்.

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனுாரை அடுத்த நொச்சிக்காட்டுவலசு, மூலக்கடை பகுதிகளில், மூலனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரை தமிழரசு தலைமையில், நேற்று டாக்டர் இந்திராணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கிளாங்குண்டல் ஊராட்சி பட்டுத்துறையில், இருபுறமும் பெண்கள் நின்று வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது மக்களிடையே டாக்டர் இந்திராணி கூறியதாவது: நமது முதல்வர் ஸ்டாலின் வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை மூலம், பெண்கள் தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைக்கின்றனர். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து பல திட்டங்களால், தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம், பல்துறை அதிகாரிகளை ஒரே இடத்திற்கு வரவைத்து, மக்கள் மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுத்தவர் நமது முதல்வர் ஸ்டாலின். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின். இப்படி மக்களுக்காகவே சிந்தித்து, பல நல்ல திட்டங்களை தந்த முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி, மீண்டும் ஐந்தாண்டுகள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் நீலாங்காளி வலசு, கருடன் கோட்டை, கந்தசாமிபுதூர், துலுக்கவலசு, முருகூர் உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், டாக்டர் இந்திராணியுடன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர். அவருடன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, கிளாங்குண்டல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், இளைஞர் அணி மூலனுார் ஒன்றிய அமைப்பாளர் மகேஷ், சுற்றுச்சூழல் அணை அமைப்பாளர் அய்யம்பாளையம் பழனிச்சாமி, சங்கன்வலசு தங்கவேல் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us