ADDED : ஏப் 03, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
அந்தியூர், அந்தியூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட உட்பட்ட நகலுாரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.நகலுார் புனித செபஸ்தியார் உயர்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் முடிந்தது. இதில் பதாகைகள் ஏந்தியும், நோட்டீஸ் வழங்கியும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் விழப்புணர்வு ஏற்படுத்தினர்.
அத்தாணி ஆர்.ஐ., வளர்மதி பேரணியை துவக்கி வைத்தார். நகலுார் வி.ஏ.ஓ., வீரமுத்து, பள்ளி தாளாளர் ஜான் லூயிஸ் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து
கொண்டனர்.
