85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு பணி மும்முரம்
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு பணி மும்முரம்
ADDED : மார் 26, 2026 01:10 AM
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க முடியாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15,572 பேர் உள்ளனர். இதே போல் மாற்றுத் திறனாளிகள், 12,098 பேர் உள்ளனர். இதில் 85 வயதுக்கு மேற்பட்டோர் குறித்து, மீண்டும் கணக்கெடுப்பு பணி நடப்பதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:85 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த வாக்காளர் பட்டியல் ஏற்கனவே உள்ளது. அதில் சிலரது வயது வித்தியாசமாக இருக்கிறது. மேலும் சிலர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
இதற்காக பி.எல்.ஓ.,க்கள் மூலம் கடந்த 20 முதல் மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணி மேலும், 4 நாட்களுக்கு தொடரும். இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் நாளில் ஓட்டுப்பதிவு நடக்கும்.
இவ்வாறு கூறினர்.
