ADDED : ஜன 27, 2025 02:27 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்து, புதுப்பித்தோர் என, 49,295 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்-பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எட்டு சட்டசபை தொகுதிகளில், 19 லட்-சத்து, 77,419 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக, 35,855 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர்.இவர்களுடன் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்று, முகவரி, போட்டோ, தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்-களை மாற்றம் செய்தவர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன்படி மொத்தம், 49,295 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக, 19,172 பேருக்கு புதிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும். இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் புதிதாக இணைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே அடையாள அட்டை வைத்தி-ருந்து திருத்தம் மேற்கொண்டவர்கள் என, 1,500 பேருக்கு அடை-யாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.