/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஜன 05, 2026 04:46 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுசாவடிகளிலும் நேற்று முன்தினம், நேற்று நடந்தது. இப்ப-ணிகளை மேற்பார்வையிட ஈரோடு மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக ராகுல்நாத் நியமிக்கப்பட்டார். பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆறு ஓட்டுச்
சாவடிகளில், அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
சிறப்பு முகாம்களுக்கு வந்திருந்தவர்களிடம் வாக்காளர் பட்டி-யலில் பெயர் சேர்த்தல், திருத்தும் மேற்கொள்ளும் பணிகளில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார். 18 வயது நிரம்பிய தகு-தியான அனைத்து வாக்காளர் பெயர் சேர்த்தல், இடம் பெயர்ந்தோர், மறைந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்குதல், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், சேவை வாக்காளர்கள், மாற்று திறனாளி வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

