/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : பிப் 12, 2026 04:32 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்காக நியமிக்கப்பட்ட, வாக்காளர் பட்-டியல் சிறப்பு பார்வையாளர் மகாபீர் பிரசாத் தலைமையில், ஈரோட்டில் சிறப்பு ஆய்வு பயணம் நடந்தது.
நிறைவு பெற்ற எஸ்.ஐ.ஆர்., பணிகள், அதன் முன்னேற்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய பெறப்பட்ட படிவங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்தார்.
பின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இறுதி வாக்-காளர் பட்டியலை மிக நேர்த்தியாக தயார் செய்வது குறித்து விளக்கம் அளித்தார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்-துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

