/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஓட்டுப்பதிவு செய்வது கடமையே' கன்னி ஓட்டு வாக்காளர்கள் பெருமிதம்
/
'ஓட்டுப்பதிவு செய்வது கடமையே' கன்னி ஓட்டு வாக்காளர்கள் பெருமிதம்
'ஓட்டுப்பதிவு செய்வது கடமையே' கன்னி ஓட்டு வாக்காளர்கள் பெருமிதம்
'ஓட்டுப்பதிவு செய்வது கடமையே' கன்னி ஓட்டு வாக்காளர்கள் பெருமிதம்
ADDED : பிப் 06, 2025 06:06 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று
ஓட்டுப்பதிவு நடந்தது. 18 வயது நிறைவடைந்து, வாக்காளராக பதிவு செய்து, இத்தேர்தலில் முதல் ஓட்டை பதிவு செய்த வாக்காளர்கள் தங்கள் உணர்வுகளை கூறியதாவது:
முதன்முறையாக ஓட்டுப்பதிவு செய்வதே மகிழ்ச்சியாக உள்ளது. தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வது நமது கடமை, அவசியம் என்பதை புரிந்து ஓட்டளித்துள்ளேன். எனது ஓட்டால் ஒரு மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்வது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.
தர்ஷினி, சி.எஸ்.ஐ., பள்ளி ஓட்டுச்சாவடி.
எனது முதல் ஓட்டை பதிவு செய்வதற்காக ஓட்டுச்சாவடிக்கு வந்ததே பெருமை. ஒரு ஓட்டு மூலம் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்வதும், அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதும் பெருமைக்குரியது, என நினைக்கிறேன்.
அட்சயா, மாநகராட்சி துவக்கப்பள்ளி, எஸ்.கே.சி., சாலை.
முதல் ஓட்டை முத்திரையாக பதித்துள்ளேன். ஓட்டுச்சாவடி வரை முன்பு பெற்றோருடன் வந்திருக்கிறேன். இம்முறை நானே ஓட்டுப்பதிவு செய்தது உணர்ச்சிகரமாக இருந்தது. ஓட்டுப்பதிவு செய்யும் பக்குவம் வருவது கூட, நமக்கான ஒரு தகுதியாக பார்க்கிறேன்.
ஸ்ரீமதி, ஸ்ரீமகாஜன பள்ளி.
தேர்தல் விதிமுறைகளை தெரிந்து கொண்டு, ஓட்டுப்பதிவு செய்ய வந்தேன். அதிக வேட்பாளர்கள் இருந்ததால் குழப்பமாக இருந்தது. இருந்தாலும், நமது ஓட்டு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்படியாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து ஓட்டுப்பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் ஓட்டுப்பதிவு செய்வேன்.
ஈஸ்வரி, அருள்நெறி திருப்பணி
மன்றம் பள்ளி, கிருஷ்ணம்பாளையம்.