ADDED : மே 17, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தமிழ்நாடு வல்கனைஷிங் தொழிலாளர் நலச்சங்க கூட்டம், மாநில தலைவர் முத்துராஜ் தலைமையில், தாராபுரத்தில், நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் தாராபுரம் தலைவராக ரவி, செயலாளராக நந்தகுமார், பொருளாளராக அபு தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தில், வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர், 30 பேர் இணைந்தனர். சங்கத்தின் செயல்பாடு குறித்து, மாநில நிர்வாகிகள் இளையராஜா, சக்திவேல் விளக்கினர். கோவை, திருப்பூர் மாவட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.