வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர்மகளிர் மேல்நிலைப்பள்ளி சாதனை
வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர்மகளிர் மேல்நிலைப்பள்ளி சாதனை
ADDED : மே 10, 2026 05:13 AM
ஈரோடு:ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. தேர்வெழுதிய, 130 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.
ஷாலிகா 565 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், அனிஷா பானு, 563 எடுத்து இரண்டாமிடம், ஜனனி, 552 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 107 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அஜிதா, சாவிகா ஆகியோர் கணினி அறிவியல் பாடத்திலும், ஷாலிகா, ஜனனி ஆகியோர் கணினி பயன்பாடுகள் பாடத்திலும், சென்டம் எடுத்து சாதித்தனர்.
சாதித்த மாணவியர், சாதனைக்கு காரணமான ஆசிரியைகள், பள்ளி தலைமையாசிரியை கவிதா ஆகியோருக்கு, பள்ளி தலைவர் முருகேசன், செயலாளர் சிவானந்தன், பொருளாளர் ரவிச்சந்திரன், பள்ளி தாளாளர் கணேசன், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கமலக்கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் பரமசிவன் மற்றும் வாழ்த்தி பாராட்டினர்.
