தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பி.டி.ஓ., ஆபீசில் காத்திருப்பு போராட்டம்

பி.டி.ஓ., ஆபீசில் காத்திருப்பு போராட்டம்

பி.டி.ஓ., ஆபீசில் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 21, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் பஞ்., ராமபைலுார்---பீக்கிரிபாளையம் செல்லும் தார்ச்சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கவில்லை. இதுகுறித்து மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாது-காப்பு சங்க வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், சத்தி பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தி போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிதி வந்ததும் சாலை அமைக்கப்படும் என அதிகா-ரிகள் தெரிவித்தனர். பிப்., மாதம் வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் சாலை அமைக்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறி கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us