ADDED : அக் 01, 2025 01:43 AM
ஈரோடு:உலக இருதய தினத்தை முன்னிட்டு, இருதய துடிப்பை இழக்காதீர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஈரோட்டில் வாக்கத்தான்(நடைபயணம்) நடந்தது.
நடைபயிற்சியை தினமும் அரைமணி நேரம் மேற்கொண்டாலே, 80 சதவீத இருதய நோய் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டது. ஈரோடு கே.எம்.சி.ஹெச்.செயல் இயக்குனர் டாக்டர். அருண் பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் ஈரோடு மெடிக்கல் டைரக்டர் டாக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையிலிருந்து தொடங்கிய வாக்கத்தானை, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) விவேகானந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாக்காத்தானில், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி சென்றனர். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையிலிருந்து தொடங்கிய வாக்காத்தான் அரசு மருத்துவமனை சந்திப்பு, காளிங்கராயன் இல்லம், பெருந்துறை சாலை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர். அருண் பழனிசாமி கூறுகையில், ''மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கேத்லேப் வசதியை நிறுவி உள்ளோம்.
முழுநேர இருதய அறுவை சிகிச்சைக்கு தனியான சிறப்பு பிரிவு உள்ளது. 25,000 ஆஞ்சியோகிராம், 15,000 ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் 3,000 இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளை சிறப்பாக செய்து, இருதயம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியுள்ளோம்,''என்றார்.