ADDED : மே 20, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம், குண்டடம் பகுதிகளில் வழிப்பறி செய்த கும்பலில், ஏற்கனவே நான்கு பேரை போலீசார் கைது செய்து நிலையில், தலைமறைவாக இருந்த ஒருவரை தேடி வந்தனர். இந்நிலையில், தாராபுரம் பைபாஸ் சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில், பைக்கில் சென்ற ஆசாமியை விசாரித்ததில், அவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த மகேஸ்வரன், 28, என்பதும், வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

