ADDED : நவ 24, 2025 04:41 AM
ஈரோடு:கார்த்திகை மாதம் பிறந்தது முதலே, அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்து விட்டது. இரவிலும் நள்ளிரவை கடந்து குளிர் அதிகரிக்கிறது. இதனால் வயதானோர் மற்றும் குழந்தைகள், சளி தொந்தரவு உள்ளவர்கள், ஸ்வெட்டரை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோட்டில் குளிரை தாக்குப்பிடிக்கும் ஸ்வெட்டர் விற்பனை தொடங்கியுள்ளது.பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு ரோடு, மீனாட்சி சுந்தரனார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இதற்காக சாலையோர கடைகள் முளைத்துள்ளன. இங்கு ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர், மழைக்கால ஆடை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: குளிர் மற்றும் மழை காலத்தை முன்னிட்டு மப்ளர், ஸ்வெட்டர், ஜெர்கின் என உள்ளிட்ட துணிகளை பெங்களுரில் இருந்து வாங்கி வந்து விற்கிறோம். மப்ளர், 30 ரூபாய், குழந்தைகளுக்கான உல்லன் ஸ்வெட்டர், 300 ரூபாய், பெரியவர்களுக்கான ஸ்வெட்டர், 500 முதல், 1,000, மழைக்கு பயன்படுத்தும் முழு ரெயின்கோட் (கவர் கோட்), 500 ரூபாய், ரெகுலர் ரெயின்கோட், 800 முதல், 900 ரூபாய்க்கும் விற்கிறோம். இவ்வாறு கூறினர்.

