தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 04, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்ப்

பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையே, அணையின் நீர் வரத்துக்கு பிரதானம். கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

இந்நிலையில் நீர்ப்

பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 196 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 11:00 மணி நிலவரப்படி நீர்

வரத்து, 2,139 கன அடியாக அதிகரித்தது. மாலை 6:00 மணிக்கு நீர்வரத்து, 756 கனஅடியாக இருந்தது.

நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 56.05 அடியாகவும், நீர் இருப்பு 6 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானி

சாகர் அணைக்கு நீர்

வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us