/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்களுக்கு குடிநீர் தர பரிசோதனை பயிற்சி
/
பெண்களுக்கு குடிநீர் தர பரிசோதனை பயிற்சி
ADDED : ஜன 21, 2025 06:46 AM
காங்கேயம்: காங்கேயம் யூனியனில் உள்ள, 16 ஊராட்சிகளில் சுய உதவி குழு பெண்கள் கிராம சுகாதார உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு, குடிநீர் பரிசோதனை பயிற்சி, காங்கேயம் யூனியன் அலுவல-கத்தில் நேற்று நடந்தது. குடிநீர்
வடிகால் வாரிய நிர்வாக பொறி-யாளர் முருகேசன் தலைமை வகித்தார். துணை நிர்வாக பொறி-யாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். காங்கேயம் ஒன்றிய வட்-டார வளர்ச்சி அலுவலர்கள் அனுராதா, விமலாதேவி கலந்து
கொண்டனர். சுய உதவிகுழு பெண்களுக்கு குடிநீரின் தரம் குறித்து ஆய்வு, களநீர் பரிசோதனை பெட்டி மூலம் செய்து காட்டி, சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சிக்கு அஸ்வத் சமூக சேவை நிறுவனம் ஏற்பாடு
செய்திருந்தது.

