sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு

/

கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு

கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு

கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு


ADDED : நவ 28, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1,000 கன அடியாக குறைப்பு புன்செய் புளியம்பட்டி:

பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், பவானி-சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 2,300 கன அடியில் இருந்து, 1,000 கன

அடியாக குறைக்-கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில்

இருந்து கீழ்ப-வானி பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில்,

நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,000 கன அடி

நீர் வெளியேற்றப்பட்டது.அதேசமயம், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும்

நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், 97.37 அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக

உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 1,069 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு

பகு-திகளில் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து

விடப்படும் நீரின் அளவு குறைக்-கப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us