/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.பள்ளி - அ.கோட்டை வாய்க்காலில் 2ம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு
/
த.பள்ளி - அ.கோட்டை வாய்க்காலில் 2ம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு
த.பள்ளி - அ.கோட்டை வாய்க்காலில் 2ம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு
த.பள்ளி - அ.கோட்டை வாய்க்காலில் 2ம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு
ADDED : அக் 25, 2025 01:22 AM
கோபி, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த மே 26ம் தேதி முதல், செப்., 22ம் தேதி வரை, முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும், பிப்.,20ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் பழனிவேலு, சத்தி மற்றும் பாசன உதவியாளர் அடங்கிய குழுவினர், தலைமதகை நேற்று காலை கையால் இயக்கி பாசனத்துக்கு தண்ணீர் திறந்தனர். இரு வாய்க்கால்களிலும், தலா, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் விவசாயிகளின் தேவையறிந்து, படிப்படியாக நீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.