வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ADDED : மார் 10, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, மார்ச் முதல் அல்-லது இரண்டாவது வாரத்தில், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாச-னத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி நடப்-பாண்டு, 2,924 ஏக்கர் பாசன பரப்பளவுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அந்தியூர் எம்.எல்.ஏ.,வெங்கடாசலம், அணையிலி-ருந்து நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். ஜூன், 16ம் தேதி வரை, 100 நாட்களுக்கு, 25 நாட்கள் நிறுத்தம் போக, 75 நாட்க-ளுக்கு, 85 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்-படும். இந்நிகழ்வில் பவானி நீர்வளத்துறை உதவி செயற்பொறி-யாளர் ஷர்மிளா, உதவி பொறியாளர்கள் கிருபாகரன், சுலைமான் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
