பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த நீர்வளத்துறை பாசன உதவியாளர்
பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த நீர்வளத்துறை பாசன உதவியாளர்
ADDED : ஆக 20, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு பழைய கரூர் சாலை பொது பணித்துறை ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ராஜா, 37. இவர் மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜா
நீர் வளத்துறை பாசன உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்
குடிபழக்கம் கொண்டவர். இதனால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கணவன்,
மனைவி தனித்தனியே பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 9ல், ஈரோடு பஸ் ஸ்டாண்ட்
மினி பஸ் நிறுத்தும் இடத்தில்
இறந்து கிடந்தார். ஆனால் போலீசாருக்கு அடையாளம் தெரியாததால், ஈரோடு
அரசு மருத்துவமனை
சவக்கிடங்கில் வைத்திருந்தனர்.
சந்தியா கூறிய அடையாளங்களை சரி பார்த்த போது, இறந்தது ராஜா
தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த, 18ல் சந்தியா, ஈரோடு அரசு
மருத்துவமனை சவ கிடங்கிற்கு சென்று, ராஜா இறந்ததை உறுதி செய்தார்.
ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
