2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை 'கட்' சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை 'கட்' சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ADDED : மார் 08, 2026 06:55 AM
ப.பாளையம்:பள்ளிப்பாளையம்
நகராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில்,
சமயசங்கிலி ஆற்றின் மையப்பகுதியில் மோட்டார் இறக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி
பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையின்
நீர்தேக்க பகுதியில் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து மின்
உற்-பத்தி செய்யப்படும். மேலும், இந்த தடுப்பணை நீர்தேக்க பகு-தியில்
இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பா-ளையம்
நகராட்சி முழுவதும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்-கப்பட்டு
வருகிறது.
கடந்த ஒரு மாதமாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.
இதனால் மின் உற்பத்தியும் பாதிக்-கப்பட்டுள்ளது.இந்நிலையில்,
தடுப்பணையில் இன்னும் ஓரிரு நாளில் பராம-ரிப்பு பணி துவங்கப்பட
உள்ளது. இதற்காக நீர்தேக்க பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள
தண்ணீர் முழுமையாக வெளியேற்-றப்படுகிறது.இதன் காரணமாக
தண்ணீர் பற்றாக்குறையை போக்க, பள்ளிப்-பாளையம் நகராட்சி பகுதியில்
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இன்று,
நாளை ஆகிய இரண்டு நாட்கள், ஆற்றின் மையப்பகு-தியில் மின் மோட்டார்
இறக்கும் பணி நடக்கிறது. இப்பணி நடப்பதால், இரண்டு நாட்களுக்கு
நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரும், 10 முதல் வழக்-கமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட
உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
