தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : மே 02, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:

பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

இந்நிலையில் அணையில் இருந்து, காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 400 கனஅடி நீர் நேற்று காலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேசமயம், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்ட, 2,300 கனஅடி தண்ணீர், 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. குடிநீர் தேவைக்காக, 150 கன அடி நீர் என மொத்தம், 1,650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 68.84 அடியாகவும், (மொத்த நீர்மட்டம் 105 அடி), நீர் இருப்பு 10.4 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. அணைக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us