/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சிக்கு 'தண்ணி' காட்டும் குழி மக்களுக்கு இன்று குடிநீர் சப்ளை நிறுத்தம்

ADDED : அக் 07, 2025 01:15 AM
ஈரோடு, ஈரோடு மணிக்கூண்டு பகுதியில், நேற்று முன்தினம் சாலையில் திடீர் குழி ஏற்பட்டது. அதே இடத் தில் நேற்று குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணி நடப்பதால், மாநகரின் சில பகுதிகளில், குடிநீர் வினியோகம் இன்று தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாநகர மக்களுக்கு ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, சூரியம்பாளையம், வ.உ.சி., பூங்கா நீருந்து நிலையங்களில் நிரப்பப்படுகிறது. இங்கிருந்து நான்கு பிரதான குழாய்கள் மூலம், 67 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பி, குடிநீர் வினியோகம் நடக்கிறது. வ.உ.சி., பூங்காவில் இருந்து செல்லும் நீருந்து குழாயில், மணிக்கூண்டு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதனால் பவானி சாலை, அஜந்தா நகர், வி.ஜி.பி., நகர்,
பி.பி.அக்ரஹாரம், வ.உ.சி., பூங்கா, கக்கன் நகர், கருங்கல்பாளையம், காந்திஜி ரோடு, பெரியார் நகர், காதர்பாட்சா வீதி, சென்னிமலை சாலை, முத்தம்பாளையம் பகுதி, கொல்லம்பாளையம், சுகந்தராபுரம், டாலர்ஸ் காலனி, கெட்டிநகர், பாரதிநகர், முத்துசாமி காலனி, தணிகை நகர் பகுதிகளில் வினியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.