ADDED : பிப் 25, 2026 07:09 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகரில் தற்போதே, வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கும் விதமாக, நீர்சத்து நிறைந்த பழங்களை வாங்குவதில், மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் மாநகரில் சாலையோர கடைகளில் தர்பூசணி வரத்து அதிகரித்து, வியாபாரமும் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணியை வாங்கி வருகிறோம். ஒரு கிலோ தர்பூசணி, 20 ரூபாய், ஒரு துண்டு, 10 ரூபாய்க்கும் விற்கிறோம். இவ்வாறு கூறினார்.
