/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நம்மால் சுய சார்புடன் செயல்பட முடியும்'
/
'நம்மால் சுய சார்புடன் செயல்பட முடியும்'
ADDED : செப் 19, 2025 02:38 AM
ஈரோடு :ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சுய சார்பு பாரத திட்டத்தில், மாநில பயிலரங்கம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ.,வின் பல்வேறு அணி தலைவர்கள், பல்வேறு பிரிவு தலைவர், துணை தலைவர்கள் பங்கேற்றனர்.
செப்.,25 முதல் டிச.,25 வரை மூன்று மாதத்தில் சுய சார்பு பாரதத்தின் மூலம் உள்ள திட்டங்கள் குறித்து, மக்களுக்கு எடுத்து செல்லும் வகையிலான நடவடிக்கையை கட்சியினர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் செந்தில், மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிலரங்கில் மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேசியதாவது: பா.ஜ.,வினர் அனைவரும் 'நமோ' செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் புள்ளி விபரங்களுடன் உள்ளன. இதன் மூலம் பிரதமருக்கு ஆலோசனை, பிரச்னைகளை பரிந்துரை செய்யலாம். அதில் பல்வேறு தகவல்களையும் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி.யும், ஆந்திர மாநில முன்னாள் பா.ஜ., தலைவருமான டகுபதி புரந்தேஸ்வரி பேசியதாவது: உலகமயமாக்கலால் பிற நாடுகளுடன் போட்டியில் உள்ளோம். இந்தியா மீதான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இவ்வாறு வரி விதித்தால் பொருளாதாரம் அழிந்து விடும். ஆனால் பிற நாடுகளை விட நம்மால் சுய சார்புடன் செயல்பட
முடியும்.
நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். அதேவேளையில் நுகர்வோர்களும் அதிகம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை நாமே நுகர்வதன் மூலம் பொருளாதாரத்தை பாதுகாக்க இயலும். இதை கருத்தில் கொண்டுதான், பிரதமர் மோடி சுய சார்பு பாரதம் திட்டத்தை உருவாக்க உள்ளார். அன்னிய பொருட்களை விலக்க வேண்டும். இந்திய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.