ADDED : மார் 12, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கோவை போத்தனுாரில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும், அம்ரித் பாரத் வாராந்திர ரயில் சேவையை நேற்று மாலை திருச்சியில் இருந்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் நேற்று மாலை, போத்தனுாரில் இருந்து தன் முதல் ஓட்டத்தை துவக்கியது. நேற்று இரவு 8:10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. ரயிலை பா.ஜ.,- காங்., கட்சியினர், பள்ளி குழந்தைகள், ரயில்வே அலுவலர்கள் வரவேற்றனர். அப்போது இனிப்பு வழங்கப்பட்டது. இந்த ரயில் 8:25 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த ரயில், 22 பெட்டிகளை கொண்டது. இந்த ரயில் தன்பாத்-துக்கு வரும் 13 மதியம், 12:30 மணிக்கு சென்றடையும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
