மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளருக்கு வரவேற்பு
மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளருக்கு வரவேற்பு
ADDED : ஏப் 10, 2026 03:04 AM
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., சார்பில், கிருத்திகா சிவக்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொகுதிக்கு உட்பட்ட தலவுமலை, சின்ன புளியங்காடு, மேட்டூர் மந்தை, திருமங்கலம் பள்ளியூத்து, பூலக்காடு, வெள்ளியம்பாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், ஏரிக்கருக்கு, பொங்காளி வலசு, செம்மண் குழிகாட்டு வலசு, குப்ப கவுண்டன் வலசு, புதுப்பாளையம், குளத்துப்பாளையம், பூவாண்டிவலசு, நெசவாளர் காலனி, பாரதி நகர், அவல் பூந்துறை, சோளிபாளையம், மீனா நகர், சுள்ளிக்காடு, கொளாங்காட்டு வலசில் நேற்று காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் செங்கரப்பாளையத்தில் துவங்கி சிவலிங்கபுரம், வேலாங்காட்டு வலசு, திருஞான சம்பந்தபுரம், கந்தாயிகுட்டை, லிங்க கவுண்டன் வலசு, புது காலனி, மாதாகோவில், சேமூர் காலனி, பூந்துறை சேமூர், பனங்காட்டு வலசு, பெரும்பாறை, செட்டிநகர், நொச்சிகாட்டு வலசு, குண்ணங்காட்டு வலசு, ஆலங்காட்டு வலசு, வேலம்பாளையம், அம்பேத்கர் நகர், வெள்ளிவிழா காலனி, பூமாண்ட வலசு, சண்முக புரம், பெரிய ஆவரங்காடு, சின்ன ஆவரங்காடு, தண்ணீர் பந்தல், குமாரவலசு, சின்ன குளம், வெள்ள கவுண்டன் வலசு, சின்ன கிணத்துபாளையம், தெக்கலுார், பொன்னாத்தா வலசு, அருவங்காடு வலசு, வேலாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.பிரசாரத்தின் போது பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் அழைத்து சென்றார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூத்துாவியும் வரவேற்பளித்தனர்.
