/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளர் துறை மூலம் 67,481 பேருக்கு நலத்திட்டம்
/
தொழிலாளர் துறை மூலம் 67,481 பேருக்கு நலத்திட்டம்
ADDED : மே 20, 2025 01:58 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 20 வகை தொழிலாளர் நலவாரியங்களில், 2021 மே, 7 முதல் கடந்த, 6ம் தேதி வரை, 59,679 பேர் புதிய உறுப்பினராகி பதிவு செய்துள்ளனர். மொத்தம், 1 லட்சத்து, 29,412 தொழிலாளர்கள் நலத்திட்ட உதவித்தொகை பெறுகின்றனர்.
தவிர, 11,237 தொழிலாளர் மாதம், 1,200 ரூபாய் ஓய்வூதியம், 9 பேர் மாதம், 500 ரூபாய் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என, 67,481 பேர், 53.50 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி பெற்றுள்ளனர்.
தொழிலாளர் துறை மூலம் ஏராளமான நலத்திட்டம், சலுகை, பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.